games

img

ஒலிம்பிக் திருவிழா - 2024

உலகின் முதன்மையான விளையாட்டுத் தொடரான ஒலிம்பிக் தொடரின்  33ஆவது சீசன் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது.

பி.வி.சிந்து அபாரம்

பாரீஸ் ஒலிம்பிக் 2024 தொடரின் 2ஆம் நாளான ஞாயிறன்று பிற்பகல் 12;50 மணிக்கு பேட்மிண்டன் குரூப் சற்று போட்டி நடைபெற்றது. இதில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, மாலத்தீவைச் சேர்ந்த பாத்திமத் நபாஹா அப்துல் ரஸ்ஸாக்கை 21-19, 21-6 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

தமிழ்நாடு வீராங்கனை இளவேனில் அதிர்ச்சி

மகளிர் 10 மீட்டர் ஏர்  ரைபிள் துப்பாக்கி  சுடுதல் தகுதிச் சுற்றில் இந்திய நட்சத்திர வீராங் கனை இளவேனில் (தமிழ் நாடு) தொடக்கத்தில் அருமையாக புள்ளி களை குவிதத்தாலும் இறுதிக்கட்ட சொதப்பலால், 630 புள்ளி களுடன் 10ஆவது இடத்தை பிடித்து இறுதிச் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தார். ஜூனியர் உலகக்கோப்பை தொடர்களில் எல்லாம் சாம்பியன் பட்டத்தை வென்ற இளவேனில் வாலறிவன் பாரீஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  தகுதிச் சுற்ற்றோடு வெளியேறியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. இளவேனில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனா, அமெரிக்காவிற்கு கலக்கத்தை ஏற்படுத்திய ஆஸ்திரேலியா

கடந்த 10 ஒலிம்பிக் சீசன்களின் தொடக்கப் பதக்கப் பட்டியலில் சீனா, அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன், ஜெர்மனி, தென் கொரியா ஆகிய 6 நாடுகளில் ஏதாவது ஒன்று முதலிடத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தும். இந்த 6 நாடுகளில் எதாவது ஒன்று  ஒட்டுமொத்த சீசனிலும்  கடைசி வரை ஆதிக்கம் செலுத்தி முதலிடத்தை தட்டிச் செல்லும். இதுதான் கடந்த 40 வருட நடைமுறையாக உள்ளது. ஆனால் தற்போது நடைபெற்று வரும் பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் முதன்முறையாக ஆஸ்திரேலியா நாடு முதல் இரண்டு நாட்கள் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது. ஞாயிறன்று மாலை 4மணி நிலவரப்படி ஆஸ்திரேலியா நாடு 3 தங்கம், 2 வெள்ளி என 5 பதக்கங்களுடன் முதலிடத்தில் இருந்தது. 3 தங்கம், ஒரு வெண்கலம் என 4 பதக்கங்களுடன் சீன இரண்டாவது இடத்திலும், ஒரு தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என 5 பதக்கங்களுடன் அமெரிக்கா 3ஆவது இடத்திலும் இருந்தது. யாரும் எதிர்பாராத வகையில் திடீரென ஆஸ்திரேலியா முதலிடத்தை பிடித்ததால் சீனா, அமெரிக்கா நாடுகள் கலக்கமடைந்தன. 

நீச்சலிலும் திடீர் ஆதிக்கம்

பொதுவாக ஒலிம்பிக் நீச்சல் பிரிவில் அமெரிக்கா தான் ஆதிக்கம் செலுத்தும். ஆனால் பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஆஸ்திரேலியா நாடு பதக்க வேட்டை நிகழ்த்தி வருகிறது. ஞாயிறன்று அதிகாலை நடைபெற்ற மகளிர் 400 மீ பிரீஸ்டைல் பிரிவின் இறுதி சுற்றில் ஆஸ்திரேலியா வீராங்கனை டைட்மஸ் 3:57.49 நிமிடத்தில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று  அசத்தினார். 3:58.37 நிமிடத்தில் பந்தைய தூரத்தை கடந்து  இரண்டாம் இடம் பிடித்த கனடாவின் சம்மர் வெள்ளிப்பதக்கத்தை யும், அமெரிக்காவின் கெய்தி 4:00.86 நிமிடத்தில் பந்தைய தூரத்தை கடந்து மூன்றாவது இடத்துடன் வெண்கலப் பதக்கத்தை யும் வென்றனர்.

அணி பிரிவிலும் தங்கம்...

அதே போல 400 மீ பிரீஸ்டைல் மகளிர் அணி (4x100) பிரிவில் ஆஸ்திரேலிய அணி 3:28.92 நிமிடத்தில் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. அமெரிக்க அணி 3:30.20 நிமிடத்தில் பந்தய தூரத்தை  கடந்து வெள்ளிப்பதக்கத்தையும், 3:30.30 நிமிடத்தில் மூன்றாவது இடத்தை பிடித்த சீன அணி வெண்கலப்பதக்கத்தை வென்றது.

பதக்கப் பட்டியல்

ஆஸ்திரேலியா
சீனா
அமெரிக்கா
பிரான்ஸ்
தென்கொரியா

தங்கம்  வெள்ளி  வெண்கலம்  மொத்தம்

3    2    0        5
3    0    1        4
1    2    2           5
1    2    2        5
1    1    1        3

மாலை 4 மணி  நிலவரம்